அக்னியை யாரும் நெருங்க முடியாதது போல இந்த விபூதியை பூசுபவர்களை துஷ்ட சக்தி நெருங்காது – விபூதி உருவான கதை !!

`பர்னாதன்’ என்ற சிவபக்தன் இருந்தான். உணவு, தண்ணீர் மறந்து சிவனை நினைத்து, கடும் தவம் இருந்தான். ஒரு நாள் அவனுக்கு கடுமையான பசி ஏற்பட்டது. தவத்தை கலைத்து கண் திறந்து பார்த்தான்.

அவனைச் சுற்றி சிங்கங்களும், புலிகளும் பறவைகளும் என பல உயிரினங்களும் காவலுக்கு இருந்தன. பறவைகள் பழங்களை பறித்துக் கொண்டு வந்து அவன் முன் வைத்தது. பசி தீர சாப்பிட்டான். மீண்டும் தவம் செய்யத் தொடங்கினான். பலவருடங்கள் கடந்தோடியது.

தவம் முடிந்து சிவ வழிபாட்டை தொடங்கினான். ஒரு நாள், தர்பை புல்லை அறுக்கும் போது அவன் கையில் கத்திபட்டு ரத்தம் கொட்டியது. அவன் பதற்றம் இல்லாமல் இருந்தான். ஆனால் அவனை என்றும் காத்து அருளும் ஈசனின் மனம் பதறியது.

சிவபெருமான் வேடன் உருவில் பர்னாதனின் கையைப் பிடித்து பார்த்தார். என்ன ஆச்சரியம். ரத்தம் கொட்டிய இடத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்தது. வந்தது தேவர்களுக்கெல்லாம் தேவர் மகாதேவர் என்பதை அவன் அறிந்தான்.

ரத்தத்தை நிறுத்தியது யார்? என்பதை அடியேன் அறிவேன் ஸ்வாமி…!’ உங்கள் சுய ரூபத்தை எனக்கு காட்டுங்கள் என்று பர்னாதன் வேண்டினான்.

சிவபெருமானும் காட்சி கொடுத்தார். “உனக்காகவே சாம்பலை உருவாக்கினேன். அதனால் இந்த சாம்பல் இன்று முதல் விபூதி என அழைக்கப்படட்டும் “.

உன் நல் தவத்தால் விபூதி உருவானது. அக்னியை யாரும் நெருங்க முடியாதது போல இந்த விபூதியை பூசுபவர்களை துஷ்ட சக்தி நெருங்காது. விபூதி என் அம்சம் என்று கூறி அவனுக்கு ஆசி வழங்கினார் சிவபெருமான்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *