காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் இன்று கருடசேவை!!

காஞ்சிபுரம்:
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் வைகுண்ட பெருமாள் திருக்கோவில் என அழைக்கப்படும். அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் குரோதி ஆண்டு வைகாசி மாத பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று அம்ச வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். மாலை சூரிய பிரபை வாகனம் உற்சவமும் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை கருட சேவை உற்சவம் நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல் இன்று மாலை அனுமன் வாகன உற்சவமும் நடைபெற உள்ளது.

இதனைத்தொடர்ந்து பிரமோற்சவத்தின் நான்காவது நாளான நாளை சேஷ வாகனம். மாலை வேளையில் சந்திர பிரபை உற்சவம் நடைபெறுகிறது.

5-ம் தேதி- ஐந்தாவது நாள் சாலை உற்சவம் நாச்சியார் திருக்கோலத்தில் பல்லாக்கு உற்சவம், தொடர்ந்து மாலை யாளி வாகன உற்சவம் நடைபெற உள்ளது.

6-ம் தேதி -ஆறாவது நாள் உற்சவம் வேணுகோபாலன் திருக்கோளத்தில் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை வேளையில் யானை வாகன உற்சவம் நடைபெறுகிறது.

தொடர்ந்து 7-ந்தேதி -எடுப்பு தேர் உற்சவம் நடைபெறுகிறது. ஜூன் 8 ஆம் தேதி எட்டாவது நாள் உற்சவம் – வெண்ணெய் தாழி கண்ணன் பல்லாக்கு மற்றும் மாலை வேளையில் குதிரை வாகனம்

9-ந்தேதி – ஒன்பதாவது நாள் உற்சவம் பல்லாக்கு மற்றும் தீர்த்த வாரி நடைபெறுகிறது மாலை முகுந்த விமான உற்சவமும் நடைபெற உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *