ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா – பக்தர்கள் புனித நீராடல்!!

ராமேஸ்வரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மகா சிவராத்திரி திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் இன்று மாசி மாத மறைநிலா அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வருகை தந்தனர்.

அக்னி தீர்த்தக் கடலில் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் நினைவாக அவர்களுக்கு திதி தர்பணம் மற்றும் பிண்ட பூஜை கொடுத்து வழிபட்டனர்.

இதன் பின்னர் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட நேரம் காத்திருந்து நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்து வழிபட்டனர்.

இந்த நிலையில், அமாவாசையை முன்னிட்டு சுவாமி, அம்பாள் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. பின்னர் மதியம் 1.31 மணிக்கு சுவாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்த வாரி நடைபெற்றது.

அதிகளவில் பக்தர்கள் வருகையை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *