சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேற்று இரவு ராமதாசை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இன்று காலை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில் டாக்டர் ராமதாஸ் சிகிச்சை பெறும் தகவல் இமயமலையில் ஆன்மீக சுற்றுப் பயணம் செய்து வரும் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த ரஜினிகாந்த் உடனடியாக டாக்டர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் விரைவில் பூரண நலம் பெற வேண்டிக்கொள்வதாகவும் டாக்டர் ராமதாசிடம் ரஜினி தெரிவித்தார்.