பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!!

பெண்கள் பிரீமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

ரோட்ரிக்ஸ் 36 பந்தில் 58 ரன்களும், அலிஸ் கேப்சி 32 பந்தில் 48 ரன்களும் விளாசினர். ஆர்சிபி அணி சார்பில் ஷ்ரேயங்கா பாட்டில் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார்.

பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி வீராங்கனைகள் களம் இறங்கினர். தொடங்க வீராங்கனை ஸ்மிரி மந்தனா 5 ரன்னிலும், ஷோபனி மோலினக்ஸ் 33 ரன்னிலும் வெளியேறினர்.

எலிஸ் பெர்ரி அதிரடியாக விளையாடி 32 பந்தில் 49 ரன்கள் அடித்தார். விக்கெட் கீபப்ர் ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடினார். இதனால் அணி வெற்றியை நெருங்கிச் சென்றது.

கடைசி ஓவரில் ஆர்சிபி அணிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ரிச்சா கோஷ் சிக்ஸ் அடித்தார். 2-வது பந்தில் ரன்ஏதும் வரவில்லை. 3-வது பந்தில் 2 ரன்களுக்கு ஓடும்போது எதிர் வீராங்கனை திஷா கசத் ரன்அவுட் ஆனார். இதனால் கடைசி 3 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் 2 ரன்கள் அடித்தார்.

ரோட்ரிக்ஸ்-கேப்சி

இதனால் கடைசி 2 பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை ரிச்சா கோஷ் சிக்சருக்கு பறக்க விட்டார். இதனா் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது.

ரிச்சா அந்த பந்தை தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் பவுன்சராக வீசப்பட்ட பந்து சரியாக பேட்டில் படவில்லை. பீல்டர் கைக்குள் பந்து சென்றாலும் ரிச்சா கோஷ் ஒரு ரன் எடுத்து போட்டியை “டை”யில் முடிக்க முயற்சித்தார். ஆனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீராங்கனைகள் சிறப்பாக பீல்டிங் செய்து ரன்அவுட் ஆக்கினார்கள். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ரிச்சா கோஷ் 29 பந்தில் 51 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் அணியை வெற்றி பெற வைக்க முடியாத கவலையுடன் வெளியேறினார். இந்த வெற்றியின் மூலம் ஏழு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *