ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிற 16-ந்தேதி வருகிறார். பின்னர் கர்னூலில் உள்ள டிரோன் நகரத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தொடர்ந்து ஸ்ரீசைலம் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். இதில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன்கல்யாண் கலந்து கொள்கின்றனர்.
ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகளை விளக்குவதற்காக 3 லட்சம் பேர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.
பிரதமர் வருகை குறித்து நேற்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஓர்வக்கல் மண்டலம் நன்னூர் அருகே தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மைதானத்தை அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் பிரதமரின் சிறப்பு திட்ட அதிகாரி வீரபாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.