திமுக எம்எல்ஏ சேந்தமங்கலம் பொன்னுசாமி காலமானார்!!

நாமக்கல்:
சேந்​தமங்​கலம் சட்​டப்​பேர​வைத் தொகுதி திமுக எம்​எல்ஏ கு.பொன்​னு​சாமி (74) உடல்​நலக்​ குறை​வால் நேற்று காலமானார். நாமக்​கல் மாவட்​டம் சேந்​தமங்​கலம் தொகுதி திமுக எம்​எல்ஏ கு.பொன்​னு​சாமி, உடல்​நலக்​குறைவு காரண​மாக நேற்று காலை நாமக்​கல் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். மாரடைப்​பால் அவர் உயி​ரிழந்​த​தாக மருத்​து​வ​மனை நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. அவருக்கு மனைவி ஜெயமணி, மகன் மாதேஸ், மகள் பூமலர் ஆகியோர் உள்ளனர்.

கொல்​லிமலை இலக்​கி​ராய்ப்​பட்​டியைச் சேர்ந்த பொன்​னு​சாமி, 9-ம் வகுப்பு வரை படித்​துள்​ளார். 2006 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சேந்​தமங்​கலம் தொகு​தி​யில் வென்ற பொன்​னு​சாமி, 2011, 2016-ம் ஆண்​டு​களில் நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்​றி​வாய்ப்பை இழந்​தார். மீண்​டும் 2021 தேர்​தலில் போட்​டி​யிட்டு எம்​எல்ஏ ஆனார்.

அவரது உடல் சேந்​தமங்​கலம் நடுக்​கோம்பை ஊராட்சி புளி​யங்​காடு கிராமத்​தில் உள்ள அவரது இல்​லத்​தில் பொது​மக்​கள் பார்​வைக்கு வைக்​கப்​பட்​டது. துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர்​கள் எ.வ.வேலு, அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி, முத்​து​சாமி, சிவசங்​கர், மதிவேந்​தன், முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி உள்​ளிட்​டோர் அவரது உடலுக்கு மாலை அணி​வித்து அஞ்​சலி செலுத்​தினர்.

இன்று (அக். 24) கொல்​லிமலை​யில் உள்ள அவரது சொந்த கிராமத்​தில் பொன்​னு​சாமி​யின் உடல் அடக்​கம் செய்​யப்பட உள்​ளது.

ஆளுநர், முதல்​வர் இரங்​கல்: சேந்​தமங்​கலம் எம்​எல்ஏ பொன்​னு​சாமி மறைவுக்கு ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உள்​ளிட்​டோர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: சட்​டப்​பேரவை உறுப்​பினர் பொன்​னு​சாமி​யின் மறைவு மிகுந்த வருத்​தம் அ ளிக்​கிறது. அவரது குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கல்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: கு.பொன்​னு​சாமி மறைந்த துயரச் செய்தி அறிந்து மிக​வும் வருந்​தினேன். அவரது பிரி​வால் வாடும் சேந்​தமங்​கலம் தொகுதி மக்​கள், அவரது குடும்​பத்​தினர், உறவினர்​கள், திமுக தொண்​டர்​களுக்கு ஆறு​தல் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

இதே​போல, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், இந்​தி​யக் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், முன்​னாள் எம்​.பி. சு.​திரு​நாவுக்​கரசர், கொமதேக பொதுச் செய​லா​ளர் ஈ.ஆர்​.ஈஸ்​வரன் உள்​ளிட்​டோரும் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *