பணி நிரந்தம் செய்யக்கோரி சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டம்!!

சென்னை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.


சென்னை மாநகராட்சி முன்பாக போராட்டம் நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்ததோடு, அவர்களை அந்த இடத்தில் இருந்து அகற்றவும் உத்தரவிட்டது.

சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்களும் ஆகஸ்ட் 13-ந் தேதி நள்ளிரவில் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

தூய்மைப் பணியாளர்கள் எதிர்த்தபோதும், அனைவரும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களிலும், சமூக நலக்கூடங்களிலும் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.


இதையடுத்து தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக ஆறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்திருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தூய்மைப் பணியாளர்களைப் பொறுத்தவரை, அடுத்தகட்டமாக அனுமதி பெற்ற இடத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்போவதாக உழைப்பாளர்கள் உரிமை இயக்கத்தின் பாரதி தெரிவித்து இருந்தார்.


இந்நிலையில் சென்னை எழும்பூரில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூய்மை பணியாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மீண்டும் பழைய நிலையில் மாநகராட்சியிலேயே பணி வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


மண்டலம் 5 மற்றும் 6-ஐ சேர்ந்த தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *