தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் நேற்று கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: திமுகவுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இணக்கமான உறவு உள்ளது.
திருமாவளவனுக்கு எதிராக விமர்சனம் செய்தால், விசிகவினர் ஆத்திரப்படுவார்கள். அதன் மூலம் இரு கட்சிகளுக்கு இடையிலான உறவை சிதைத்துவிடலாம் என பலர் கருதுகின்றனர். அது ஒருபோதும் நடக்காது.
ஏனென்றால், நாங்கள் பெரியார், அம்பேத்கர், காரல்மார்க்ஸ் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறோம். அதே கொள்கைகளை திமுகவும் பின்பற்றி வருவதால், எங்களுக்குள் எந்தப் பிரிவினையும் ஏற்படாது. இவ்வாறு அவர் பேசினார்.