டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்த கேப்டன் மிட்சேல் மார்ஷ்!!

மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை (1-2) இழந்தது. அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது.இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்ததால் அத்துடன் ஆட்டம் ரத்தானது.

இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பிட்டிங் செய்கிறது.

இந்தியா :
அபிஷேக் ஷர்மா, கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா:
மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் , டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், மேத்யூ குஹ்னேமன், ஜோஷ் ஹேசில்வுட்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *