லக்னோ;
ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.
இதனைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி தொடக்கவீரர் பிரியன்ஸ் ஆர்யா 8 ரன்கள் அடித்திருந்தபோது திக்வேஷ் ரதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்த விக்கெட்டை கொண்டாடும் விதமாக பிரியன்ஸ் ஆர்யா பக்கத்தில் சென்று தனது கைகளில் எழுதுவது போன்ற ‘notebook’ கொண்டாட்டத்தில் திக்வேஷ் ஈடுபட்டார்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தீவின் கெஸ்ரிக் வில்லியம்ஸ் பந்துவீச்சில் சிக்ஸ் அடித்த பிறகு ‘நோட்புக்’ கொண்டாட்டத்தில் விராட் கோலி ஈடுபட்டார்.
விராட் கோலியின் ‘நோட்புக்’ கொண்டாட்டத்தை திக்வேஷ் செய்தது இணையத்தில் வைரலானது.