தாதா சாகேப் பால்கே விருதை வென்ற அல்லு அர்ஜுன்!!

சென்னை,
2025 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் அக்டோபர் 30 ஆம் தேதி வழங்கப்பட்டன. அதில் பல்கலை வித்தகர் (Most Versatile Actor) என்ற மதிப்பு மிகுந்த விருதை அல்லு அர்ஜுன் வென்றார்.

இந்த விருதுக்கு அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்த நம்பமுடியாத கௌரவத்திற்கு தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகளுக்கு நன்றி.

இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் தொடர்ச்சியான அன்பு மற்றும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி. இந்த விருதை எனது ரசிகர்களுக்கு பணிவுடன் அர்ப்பணிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அண்மையில் புஷ்பா 2 படத்திற்காக 2025 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த நடிக்கருக்கான விருதை அல்லு அர்ஜுன் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


புஷ்பா 2 படத்தை தொடர்ந்து தற்போது அட்லி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகும் படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *