சரத்குமார் தனது கட்சியை முழுவதுமாக பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத் துள்ள நிகழ்வு மகிழ்ச்சியடைய செய்கிறது – வானதி சீனிவாசன்!

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தது மகிழ்ச்சியடைய செய்கிறது என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார். கட்சியை பாஜகவுடன் இணைத்த காரணத்தை கூறிய சரத்குமார், யாருடன் கூட்டணி, எவ்வளவு சீட், என்ன டிமேண்ட் வைப்பது என்பது மட்டும்தானா அரசியல்? மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற கொள்கை அடிபட்டுவிடுகிறதே!

நாமும் அந்த வழியில் செல்ல வேண்டுமா என்ற கேள்வி என் மனதில் தோன்றியது. எனவே நமது சக்தியை, மோடி என்னும் சக்தியோடு இணைத்து செயல்பட வேண்டும் என்று சிந்தித்து முடிவெடுத்திருக்கிறேன். பெருந்தலைவர் காமராஜர் போல் ஆட்சி நடத்துகிறார் பிரதமர் மோடி. இது சமக-வின் முடிவல்ல. புதிய எழுச்சியின் தொடக்கம் என கூறினார்.

இந்த நிலையில், சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தது மகிழ்ச்சியடைய செய்கிறது என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில், பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் 10 ஆண்டு கால அரசின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு இன்றையதினம் தமிழக பாஜகவிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் திரு சரத்குமார் அவர்கள் தங்கள் கட்சியை முழுவதுமாக பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்துள்ள நிகழ்வு மகிழ்ச்சியடைய செய்கிறது. தமிழக பாஜக சார்பில் அவரை மனதார வரவேற்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *