மின் கட்​ட​ணம் வழக்​கத்​தை​விட அதி​க​மாக வந்​தால் அதி​காரி​களிடம் முறை​யிடலாம் – மின்வாரிய அதிகாரிகள் தகவல்!!

சென்னை:
மின் கட்​ட​ணம் வழக்​கத்​தை​விட அதி​க​மாக வந்​தால் அதி​காரி​களிடம் முறை​யிடலாம் என்று மின்​வாரி​யம் தெரி​வித்​துள்​ளது. தமிழ்​நாடு மின்​சார வாரி​யம் நுகர்​வோர் பயன்​படுத்​தும் மின்​சா​ரத்தை கணக்​கிட்டு மின் கட்​ட​ணத்தை வசூலிக்​கிறது.

மின்​வாரி​யங்​களின் நிதி நிலைமை சீராக இருப்​ப​தற்​காக, அந்​தந்த மாநிலங்​களின் மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​யம் அவ்​வப்​போது மின்​சார கட்​ட​ணத்​தில் மாற்​றம் செய்து வரு​கிறது. தமிழக மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​ய​மும் மின்​கட்​ட​ணத்தை ஆண்​டு​தோறும் மாற்றி அமைத்து வரு​கிறது.

தமிழகத்​தில் 100 யூனிட் வரை பயன்​படுத்​துபவர்​களுக்கு கட்​ட​ணம் கிடை​யாது. அதே​போல் 200 யூனிட் வரை பயன்​படுத்​து​வோரும் அதிக அளவில் கட்​ட​ணம் செலுத்த வேண்​டிய நிலை இருக்​காது. ஆனால், 300 யூனிட் அல்​லது அதற்கு மேல் பயன்​படுத்​து​வோர் கணிச​மாக கட்​ட​ணம் செலுத்த வேண்​டி​யுள்ளது.

குறிப்​பாக, 60 நாட்​களுக்கு 400 யூனிட் வரை, ஒரு யூனிட்​டுக்கு ரூ.4.95 கட்​ட​ணம், 401 முதல் 500 யூனிட் வரை ரூ.6.65 கட்​ட​ணம், 501 முதல் 600 யூனிட் வரை ரூ.8.80 கட்​ட​ணம், 601 முதல் 800 யூனிட் வரை ரூ.9.95 கட்​ட​ணம், 801 முதல் 1,000 யூனிட் வரை ரூ.11.05 கட்​ட​ணம், 1,000 யூனிட்​டுக்கு மேல் ரூ.12.15 கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது.

மின்​நுகர்​வோர் புகார்: சில பகு​தி​களில் 60 நாட்​களில் எடுக்க வேண்​டிய கணக்​கெடுப்பு தாமத​மாகி, 5 நாட்​களுக்கு பிறகு எடுக்​கப்​படு​வ​தால், யூனிட் வரம்பு உயர்ந்​து, மின் கட்​ட​ணம் கடுமை​யாக உயர்ந்​து​விடு​கிறது.

அந்த வகை​யில், பல வீடு​களில் செப்​டம்​பர், அக்​டோபர் மாதத்​துக்​கான மின்கட்​ட​ணம் வழக்​கத்​துக்கு மாறாக பல மடங்கு அதி​கரித்​துள்​ள​தாக மின்​நுகர்​வோர் புகார் கூறி வரு​கின்​றனர்.

இதுகுறித்து மின்​வாரிய அதி​காரி​கள் கூறிய​தாவது: தமிழ்​நாடு மின்​வாரிய ஒழுங்​கு​முறை ஆணை​யம் கட்டண உயர்வு குறித்து தற்​போது எந்த உத்​தர​வும் பிறப்​பிக்​க​வில்​லை. பல இடங்​களில் மின் கட்​ட​ணம் கணக்​கீடு செய்​யும் பணி முறை​யாக நடை​பெற​வில்​லை. இதில் பல பிரச்​சினை​கள் இருப்​ப​தாக மக்​களிடம் இருந்து தொடர்ந்து புகார்​கள் வரு​கின்​றன.

வீடு​களுக்கு கூடு​தல் மின் கட்​ட​ணம் வந்​தால், சம்​பந்​தப்​பட்டஅதி​காரி​களிடம் நுகர்​வோர் முறை​யிடலாம். தவறு இருந்​தால், அதி​காரி​கள் தீவிர விசா​ரணை நடத்​து​வார்​கள். மின்​வாரிய ஊழியர்​களிடம் தவறு இருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டால், அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.​

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *