திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நவம்பர் 17-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கார்த்திகை பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலை சுத்தம் செய்து புனிதப்படுத்தும் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.
நாளை காலை 6.30 மணி முதல் காலை 9 மணி வரை, பாரம்பரிய முறைப்படி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படும்.
அப்போது கோவில் கருவறை, கோவில் சுவர்கள், கூரைகள் மற்றும் அனைத்து பூஜை பாத்திரங்களும் முதலில் தண்ணீரில் சுத்தம் செய்யப்பட்டு, பின்னர் பரிமளம் எனப்படும் நறுமண கலவை பூசப்பட்டு சுத்தம் செய்யப்படும்.
ஆழ்வார் திருமஞ்சனம் முடிந்ததும், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நாளை மற்றும் நவம்பர் 17 முதல் 25 வரை கோவிலில் அனைத்து அர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படும்.