புதுடெல்லி:
நெய்யாறு அணையிலிருந்து உரிய நீரை திறக்க கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு நேற்று விசாரித்தது.
கேரள அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய 2 அல்லது 3 வாரம் அவகாசம் கோரினார்.
தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வி. கிருஷ்ணமூர்த்தி, கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்யட்டும், அதற்கு விளக்கம் அளிக்கும் மனுவை 2 வாரத்துக்குள் தாக்கல் செய்வோம் என்றார்.
இரு தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் மனுவுக்கு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்கவும், பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்கும் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.