கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கிய வழக்கில் 7 பேர் நீதிமன்றத்தில் சரண்!!

கரூர்:
கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். அப்​போது, அங்கு ஏராள​மான ஆம்​புலன்​ஸ்​கள் வந்​தன.

சேலத்​தைச் சேர்ந்த எஸ்​.ஆர்​.மணி​கண்​டன் உள்​ளிட்ட 7 பேர் ஒரு ஆம்​புலன்ஸை வழிமறித்​து, ஓட்​டுநர் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர்.

இந்த வழக்​கில் தலைமறை​வாக இருந்த மணி​கண்​டன், கரூர் குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றம் 1-ல் சரணடைந்து முன்​ஜாமீன் பெற்​றார்.

இது தொடர்​பான மற்​றொரு வழக்​கில் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் மணி​கண்​டன் உள்​ளிட்ட 7 பேர் நிபந்​தனை ஜாமீன் பெற்​றனர்.

இந்​நிலை​யில், இந்த 7 பேரும் கரூர் குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றம் 1-ல் மாஜிஸ்​திரேட் பரத்​கு​மார் முன்​னிலை​யில் நேற்று சரணடைந்​தனர். பின்​னர் அனை​வரும் ஜாமீனில் சேலம் திரும்​பினர்.

அவர்​கள் இன்று (நவ.20) முதல் சேலம் நகர காவல் நிலை​யத்​தில் ஆஜராகி கையெழுத்​திடு​வர்.

2-வது முறை​யாக விசா​ரணை: கூட்ட நெரிசல் உயி​ரிழப்பு சம்​பவம் தொடர்​பாக கரூர் சுற்​றுலா மாளி​கை​யில் கடந்த 13-ம் தேதி தமிழ்​நாடு மின் உற்​பத்தி மற்​றும் பகிர்​மானக் கழக அதி​காரி​கள் ஆஜரா​னார்​கள். அவர்​களிடம் சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர்.

இந்​நிலை​யில், மீண்​டும் 2-வது முறை​யாக நேற்று மின் வாரிய செயற் பொறி​யாளர் கணி​கை​மார்த்​தாள் உள்​ளிட்ட 10 அதி​காரி​கள் சிபிஐ அதி​காரி​கள் முன்​னிலை​யில் ஆஜராகினர்.

அவர்​களிடம், தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தின்​போது மின் தடை ஏற்​பட்​டது குறித்​து அதி​காரி​கள்​ வி​சாரித்​தனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *