டாக்கா:
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி டாக்கா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா, தீப்ஷிகா, பிரித்திகா பிரதீப் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 236 – 234 என்ற புள்ளிகள் கணக்கில் கொரியா அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் அபிஷேக் வர்மா, தீப்ஷிகா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 153 – 151 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
ஆடவருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் அபிஷேக் வர்மா, சாஹில் ராஜேஷ் ஜாதவ், பிரதமேஷ் பால்சந்திரா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 229 – 230 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.