சென்னை:
தமிழகத்தில் கடந்த நவ.4-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணி நடைபெற்று வருகிறது.
இந்த திருத்தப் பணிக்காக 68,467 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 37,390 பேர் கட்சிகளின் முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைவரின் படிவங்களும் 100 சதவீதம் அச்சிட்டு, நேற்று வரை 5 கோடியே 62 லட்சத்து 5,749 வாக்காளர்களிடம் (87.66 சதவீதம்) வழங்கப் பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.