பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார் -பிரதமர் மோடி!!

திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் மோடி. கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை ஹெலிகாப்டர் தளத்தில் ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கினார். அதனை தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரி பொதுக்கூட்ட மேடைக்கு இன்னும் சற்று நேரத்தில் வந்தடைவார்.

இதன் மூலம் நடப்பாண்டில் 5வது முறையாக பிரதமர் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார். காலை 11 மணியளவில் கன்னியாகுமரியின் அகஸ்தீஸ்வரத்தில் நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

பிற்பகல் 12.15 மணியளவில் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்கிறார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *