தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர். அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர்.
ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 42 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மதீனாவில் இந்தியர்கள் விபத்தில் சிக்கிய செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருடன் என் எண்ணங்கள் உள்ளன.
காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
ரியாத்தில் உள்ள நம் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன.
நம் அதிகாரிகள் சவுதி அரேபிய அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.