தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்​டி​யின்​போது காயமடைந்த இந்​திய கிரிக்​கெட் அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தி!!

கொல்கத்தா:
தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்​டி​யின்​போது காயமடைந்த இந்​திய கிரிக்​கெட் அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார்.

கொல்​கத்​தா​வில் நடை​பெற்ற முதல் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் ஷுப்​மன் கில் விளை​யாடிக் கொண்​டிருந்​த ​போது கழுத்​தில் சுளுக்கு ஏற்​பட்டு பெவிலியன் திரும்​பி​னார். அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள் ஓய்​வு எடுக்​கு​மாறு அறி​வுறுத்​தினர். இதனால் அவர் 2-வது இன்​னிங்​ஸிலும் விளை​யாடவில்​லை.

இந்​நிலை​யில் அவருக்கு கழுத்​தில் கா​யம் ஏற்​பட்​டுள்​ள​தாக​வும், அவர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப் ​பட்​டிருப்​ப​தாக​வும் இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம்​ (பிசிசிஐ) தெரி​வித்​துள்​ளது. சனிக்​கிழமை மாலை அவர் ஆம்​புலன்​ஸ் மூலம் கொல்​கத்​தா​விலுள்ள மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டார்.

மருத்​து​வ​மனை​யில் அவருக்கு பரிசோதனை செய்​யப்​பட்​டதாக​வும், அவர் தொடர்ந்து மருத்​து​வக் கண்​காணிப்​பில் இருப்​ப​தாக​வும் மருத்​து​வர்​கள் தெரி​வித்​துள்​ளனர். இந்நிலையில், நேற்று மாலை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதனால் வரும் 22ம் தேதி நடை​பெறவுள்ள தென் ஆப்​பிரிக்​கா, இந்​திய அணி​களுக்கு இடையி​லான 2வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யில் அவர் பங்​கேற்​பது சந்​தேகம் என்று பிசிசிஐ வட்​டாரங்​கள் தெரி​வித்​தன. ஷுப்​மன் கில் இல்​லாத நிலை​யில், ரிஷப் பந்த் பொறுப்பு கேப்​ட​னாக செயல்பட்​டார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *