கர்நாடகா ;
கர்நாடகா பெட்டகேரி கிராமத்தில் வசித்து வரும் சிறுவன் சாய்ராம். இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்தநிலையில் பெட்டகேரி கிராமத்தில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லாமல் கிராம மக்கள் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையை மாற்ற நினைத்த சிறுவன் சாய்ராம், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளான்.
அதில், ‘எங்கள் பெட்டகேரி கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை, மழை நேரங்களில் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
மேலும் நாங்கள்(கிராமத்தில் உள்ள மாணவ-மாணவிகள்) பள்ளி முடிந்து வந்ததும் அந்த சேற்றில் தான் விளையாடும் நிலை உள்ளது.
குடிநீர் சரியாக கிடைப்பதில்லை. எனவே எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்’ என்று எழுதி உள்ளான். சிறுவனின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.