துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்ற குர்பிரீத் சிங்!!

கெய்ரோ:
உலக துப்​பாக்கி சுடு​தல் சாம்​பியன்​ஷிப் எகிப்து நாட்​டில் உள்ள கெய்ரோ நகரில் நடை​பெற்று வரு​கிறது.

இதில் ஆடவருக்​கான 25 மீட்​டர் சென்​டர் ஃபயர் பிஸ்​டல் பிரி​வில் இந்​தி​யா​வின் குர்​பிரீத் சிங் 584 -18x புள்​ளி​கள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். உக்​ரைனின்பாவ்லோ கொரோஸ்​டிலோவ் 584 – 29x புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் பெற்​றார்.

பிரான்​ஸின் யான் பியர்லூயிஸ் ஃப்​ரிட்​ரிசி 583 –-18x புள்ளிகளு​டன் 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​றி​னார். இந்​தத் தொடரை இந்​திய அணி 3 தங்​கம், 6 வெள்​ளி, 4 வெண்​கலம் என 13 பதக்​கங்​கள் பெற்று 3-வது இடத்​துடன் நிறைவு செய்​தது.

சீனா: 12 தங்​கம், 7 வெள்​ளி, 2 வெண்​கலம் என 21 பதக்​கங்​களை குவித்து முதலிடம் பிடித்​தது. தென் கொரியா: 7 தங்​கம், 3 வெள்​ளி, 4 வெண்​கலத்​துடன் 14 பதக்​கங்​கள்​ பெற்​று 2-வது இடம்​ பிடித்​தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *