உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது போர்ச்சுகல் அணி!!

போர்டோ:
2026-ம் ஆண்டு நடை​பெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்​கான தகுதி சுற்று ஆட்​டங்​கள் உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெற்று வரு​கின்றன.

இதில் ஐரோப்​பிய நாடு​களுக்​கான தகுதி சுற்​றில் எஃப் பிரி​வில் நேற்று முன்​தினம் இரவு போர்ச்​சுகலின் போர்டோ நகரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் போர்ச்​சுகல் – அர்​மேனியா அணி​கள் மோதின.

இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றால் மட்​டுமே உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்கு பெற முடி​யும் என்ற நெருக்​கடி​யுடன் களமிறங்​கியது போர்ச்சுகல்.

அந்த அணி​யின் கேப்​ட​னும், நட்​சத்​திர வீரரு​மான கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோ, அயர்​லாந்து அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ‘ரெட் கார்​டு’ பெற்​றிருந்​த​தால் அர்​மேனியா அணி​யுட​னான ஆட்டத்​தில் களமிறங்​க​வில்​லை.

எனினும் போர்ச்​சுகல் அணி அபார​மாக செயல்​பட்டு 9-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. அந்த அணி தரப்​பில் ஜோவோ நெவ்ஸ் (30, 41 மற்​றும் 81-வது நிமிடங்​கள்), புருனோ பெர்​னாண்​டஸ் (45+3, 52 மற்​றும் 72-வது நிமிடங்​கள்) ஆகியோர் ஹாட்​ரிக் கோல் அடித்து அசத்​தினர்.

முன்​ன​தாக ரெனாடோ வெய்கா 7-வது நிமிடத்​தி​லும், கோன்​கலோ ரமோஸ் 28-வது நிமிடத்​தி​லும் தலா ஒரு கோல் அடித்​திருந்​தனர்.

ஆட்​டத்​தின் இறு​திப் பகு​தி​யில் 90+2-வது நிமிடத்​தில் பிரான்​சிஸ்கோ கான்​சி​காவோ கோல் அடித்​தார். அர்​மேனியா அணி சார்​பில் 18-வது நிமிடத்​தில் ஸ்பெர்ட்​சி​யன் ஒரு கோல் அடித்​தார்.

இந்த வெற்​றி​யின் மூலம் போர்ச்​சுகல் அணி எஃப் பிரி​வில் 13 புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்து உலகக் கோப்பை கால்​பந்து தொடக்கு தகுதி பெற்​றது.

அந்த அணி 6 ஆட்​டங்​களில் 4 வெற்​றி, ஒரு டிரா, ஒரு தோல்​வியை பதிவு செய்​தது. இதே பிரி​வில் இடம் பெற்​றுள்ள அயர்​லாந்து அணி தனது கடைசி ஆட்​டத்​தில் ஹங்​கேரி​யுடன் மோதி​யது.

இதில் அயர்​லாந்து 3-2 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. இந்த வெற்​றி​யின் மூலம் அயர்​லாந்து ‘எஃப்’ பிரி​வில் 10 புள்​ளி​களு​டன் 2-வது இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்​றுக்கு தகுதி பெற்​றது. அயர்​லாந்து அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, ஒரு டிரா, 2 தோல்​வியை பெற்​றது.

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தகுதி சுற்றில் அர்மேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை இலக்கை நோக்கி விரைவாக கடத்திச் செல்கிறார் போர்ச்சுகல் அணியின் ஜோவோ நெவ்ஸ். படம்: ஏஎப்பி

1998-ம் ஆண்​டுக்கு பிறகு நார்வே: இத்​தாலி​யின் மிலன் நகரில் நடை​பெற்ற ஃபிபா உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்​டத்​தில் ‘ஐ’ பிரி​வில் உள்ள நார்வே – இத்​தாலி அணி​கள் மோதின.

இதில் நார்வே 4-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. அந்த அணி சார்​பில் எர்​லிங் ஹாலண்ட் 2 கோல்​களும் (78 மற்​றும் 79-வது நிமிடங்​கள்), அன்​டோனியோ நுசா (63-வது நிமிடம்), ஸ்ட்​ராண்ட் லார்​சன் 90+3-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்​தனர்.

இத்​தாலி அணி தரப்​பில் பிரான்​செஸ்கோ பியோ எஸ்​போசிட்டோ (11-வது நிமிடம்) கோல் அடித்​தார். 8-வது வெற்​றி​யாக அமைந்​தது. இதன் மூலம் அந்த அணி தனது பிரி​வில் 24 புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்​றது.

1998-ம் ஆண்​டுக்கு பிறகு தற்​போது​தான் நார்வே அணி, உலகக் கோப்​பை​யில் விளை​யாட உள்​ளது. 4 முறை ​சாம்​பிய​னான இத்​​தாலி அணி 18 புள்​ளிகளுடன்​ 2-வது இடம்​ பிடித்​து பிளே ஆஃப்​ சுற்​றுக்​கு முன்​னேறி உள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *