தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்தை ஆர்​.பி.உதயகு​மார் மரி​யாதை நிமித்​த​மாக சந்​தித்​துப் பேச்​சு!!

“எங்​கள் கூட்​ட​ணிக்கு இன்​னும் சில கட்​சிகள் வரவிருக்​கின்​றன” என சேலத்​தில் இபிஎஸ்ஸை சந்​தித்​துப் பேசிய பிறகு ஜி.கே.​வாசன் பேட்​டியளித்த அதே​நேரத்​தில் மதுரை​யில், தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்தை எதிர்க்​கட்சி துணைத் தலை​வர் ஆர்​.பி.உதயகு​மார் ‘மரி​யாதை நிமித்​த​மாக’ சந்​தித்​துப் பேசி​யது பல்​வேறு ஊகங்​களை விதைத்து விட்​டிருக்​கிறது.

தேமு​திக வாக்​குச் சாவடி முகவர்​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​துக்​காக கடந்த 17-ம் தேதி மதுரை வந்​திருந்​தார் அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த். இந்த நிகழ்ச்​சி​யில் தான் பிரேமல​தாவை உதயகு​மார் திடீரென சந்​தித்​துப் பேசி​னார்.

இந்த சந்​திப்பு முடிந்​தவுடன், “அதி​முக​வுடன் தேமு​திக கூட்​டணி சேர வாய்ப்பு இருக்​கிற​தா… இந்த சந்​திப்பு அதற்​கான அச்​சா​ர​மா?” என செய்​தி​யாளர்​கள் கேட்ட கேள்விக்கு மழுப்​பலாகவே பதிலளித்த பிரேமல​தா, ‘‘கூட்​டணி சிதம்பர ரகசி​யமா என்ன? ரகசி​யம் என்​பதே தேமு​திக வரலாற்​றில் கிடை​யாது. தமி​ழ​கத்​தில் உள்ள அனைத்​துக் கட்​சிகளுமே எங்​களுக்கு தோழமைக் கட்​சிகள்​தான்.

அவர்​கள் எல்​லோருமே தேமு​தி​க-வுடன் கூட்​டணி வைக்க ஆர்​வ​மாக உள்​ளனர். என்​றாலும் மாவட்​டச் செய​லா​ளர்​களை​யும், நிர்​வாகிகளை​யும் அழைத்​துப் பேசி மக்​கள் மனநிலை​யை​யும் ஆராய்ந்து நாங்​கள் நிச்​சய​மாக நல்ல முடிவை எடுப்​போம்” என்​றார்.

அப்​போதும் விடாத செய்​தி​யாளர்​கள், ‘‘திடீரென ஆர்​.பி.உதயகு​மார் உங்​களை வந்து சந்​தித்​திருக்​கி​றாரே..?” என்று கேட்​டதற்​கு, ‘‘இவங்க கூட​தான் கூட்​ட​ணி… அவங்​ககூட தான் கூட்​டணி என்று நாங்​கள் இன்​ன​மும் முடிவுக்கு வரவில்​லை.

எங்​கம்​மா​வின் மறைவுக்கு அனைத்து தலை​வர்​களும் வந்து இறுதி மரி​யாதை செலுத்​தி​னார்​கள். பிரதமரும் இரங்​கல் தெரி​வித்​தார். அந்த அடிப்​படை​யில் தான் உதயகு​மாரும் இன்று என்னை சந்​தித்து துக்​கம் விசா​ரித்​தார்” என்​றார்.

பிரேல​தாவை சந்​திக்​கும் முன்​பாக, தேமு​திக கூட்​டம் நடந்த மண்​டபத்​தின் ஓர் அறை​யில் சுமார் அரை மணி நேரத்​துக்​கும் மேலாக உதயகு​மார் காத்​திருந்​தார்.

கட்​சிக் கூட்​டத்தை முடித்​து​விட்டு வந்து அவரை சந்​தித்த பிரேமல​தா, உதயகு​மாரை உட்​கார​வைத்​துக் கூட பேசாமல் நிற்க வைத்தே சுமார் 5 நிமிடங்​கள் பேசி​விட்டு அவரை வழிய​னுப்பி வைத்​தார்.

பிரேமல​தாவை மரி​யாதை நிமித்​த​மாக சந்​திக்​கும்​படி இபிஎஸ் தன்னை அனுப்பி வைத்​த​தாக உதயகு​மாரே செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில் வெளிப்​படை​யாகச் சொன்​னார்.

இருந்த போதும், இப்​போதைக்கு யாருக்​கும் பிடி​கொடுத்​து​விட வேண்​டாம் என்ற முன் ஜாக்​கிரதை​யுடன் உதயகு​மாரை ‘ஆகட்​டும் பார்க்​கலாம்’ என்ற ரேஞ்​சில் நிற்​க​வைத்தே பேசி அனுப்பி இருக்​கி​றார் பிரேமல​தா.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய மதுரை அதி​முக நிர்​வாகி​கள் சிலர், “மரி​யாதை நிமித்​த​மாக தன்​னைச் சந்​திக்க வந்த உதயகு​மாரை பிரேமலதா தனி​யாகச் சந்​தித்​துப் பேசி இருக்​கலாம். அல்​லது 2 நாட்​கள் மதுரை​யில் இருந்த அவரை யாருக்​கும் தெரி​யாமலா​வது போய் சந்​தித்​திருக்​கலாம் உதயகு​மார்.

ஆனால், அதற்​கான வாய்ப்பை பிரேமலதா கொடுக்​க​வில்லை எனத் தெரி​கிறது. ஒரு​வேளை, அதி​முக தங்​களது தயவை தேடு​கிறது என வெளி​யில் தெரிய​வேண்​டும் என பிரேமலதா நினைத்​தாரோ என்​ன​வோ.

மக்​கள​வைத் தேர்​தலில் விருதுநகரில் போட்​டி​யிட்ட விஜய பிர​பாகரனுக்​காக உதயகு​மார் மிகக் கடுமை​யாக உழைத்​தார்.

அதனால் தான் அவரை பேச்​சு​வார்த்​தைக்கு அனுப்பி இருக்​கி​றார் இபிஎஸ். ஆனால் பிரேமல​தா, திமுக சைடிலும் பேசிக்​கொண்டு இருப்​பார் போலிருக்​கிறது. அதனால் தான் உதயகு​மாரை பட்​டும் படா​மல் பேசி அனுப்பி இருக்​கி​றார்” என்​ற​னர்.

தேமு​திக நிர்​வாகி​களோ, ‘‘ஆலோ​சனைக் கூட்​டம் நடந்து கொண்​டிருக்​கும் சமயத்​தில் உதயகு​மார் வந்​து​விட்​டார். அதனால், அவரை எங்​கள் பொதுச்​செய​லா​ளர் கூட்​டம் முடிந்து வந்து சந்​தித்​தார்.

இரு​வ​ரும் அடுத்​தடுத்த நிகழ்ச்​சிகளுக்கு போக வேண்டி இருந்​த​தால் உட்​கார்ந்து பேச நேரமில்​லாமல் நின்று கொண்டே பேசினர்” என்​றார்​கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *