உச்ச நீதி​மன்​றத்​தின் 53-வது தலைமை நீதிப​தி​யாக பதவியேற்ற சூர்யகாந்த்!! அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ….

புதுடெல்லி:
உச்ச நீதி​மன்​றத்​தின் 53-வது தலைமை நீதிப​தி​யாக பதவியேற்றார் சூர்யகாந்த். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யாக பதவி வகித்த பி.ஆர். கவா​யின் பதவிக் காலம் நேற்​றுடன் நிறைவடைந்​தது.

இதைத் தொடர்ந்து உச்ச நீதி​மன்​றத்​தின் 53-வது தலைமை நீதிப​தி​யாக சூர்யகாந்த் இன்று பதவி​யேற்றார்.

குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இதற்கான விழாவில், அவருக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பதவிப்பிர​மாண​மும் ரகசிய காப்பு பிர​மாண​மும் செய்து வைத்தார்.

அரசியலமைப்பை காப்பேன் என்றும், கடமைகளை உண்மையாக நிறைவேற்றுவேன் என்றும் இந்தியில் கூறி சூர்யகாந்த் பதவியேற்றார். இதையடுத்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த 1962-ம் ஆண்டு பிப்​ர​வரி 10-ம் தேதி ஹரி​யா​னா​வின் ஹிசார் பகு​தி​யில் சூர்யகாந்த் பிறந்​தார்.

ஹிசா​ரில் பள்​ளிப் படிப்​பு, கல்​லூரி படிப்பை நிறைவு செய்த அவர் ரோத்​தக் மற்​றும் குருஷேத்​திரா பல்​கலைக்​கழகத்​தில் எல்​எல்​பி, எல்​எல்​எம் சட்​டப் படிப்​பு​களை படித்​தார்.

கடந்த 1984-ம் ஆண்​டில் ஹிசார் மாவட்ட நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞ​ராகபணியை தொடங்​கி​னார்.

பின்​னர் பஞ்​சாப்​-ஹரி​யானா உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞ​ராக பணி​யாற்​றி​னார். கடந்த 2000-ம் ஆண்​டில் ஹரி​யானா அட்​வகேட் ஜென​ரலாக அவர் நியமிக்​கப்​பட்​டார்.

கடந்த 2004-ம் ஆண்​டில் பஞ்​சாப்- ஹரி​யானா உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக பதவி​யேற்​றார். கடந்த 2018-ம் ஆண்​டில் இமாச்சல பிரதேச தலைமை நீதிப​தி​யாக பொறுப்​பேற்​றார். கடந்த 2019-ம் ஆண்​டில் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​யாக அவர் பதவி​யேற்​றார்.

1,000 வழக்​கு​களில் தீர்ப்பு: உயர் நீதி​மன்​றம் முதல் உச்ச நீதி​மன்​றம் வரை சுமார் 1,000 வழக்​கு​களில் அவர் தீர்ப்பு வழங்கி உள்​ளார். குறிப்​பாக 370-வது சட்​டப்​பிரிவு, தேசத்​துரோக சட்​டம், பெகாசஸ் வழக்​கு, பிஹார் எஸ்​ஐஆர் வழக்​கு​களில் அவர் முக்​கிய தீர்ப்​பு​கள், உத்​தர​வு​களை பிறப்​பித்​துள்​ளார்.

டெல்​லி​யில் கடந்த சனிக்​கிழமை நீதிபதி சூர்​ய​காந்த் பேசி​ய​போது, “நவம்​பர் 24-ம் தேதி உச்ச நீதி​மன்​றத்​தின் தலைமை நீதிப​தி​யாக பதவி​யேற்க உள்​ளேன். எனது பதவிக் காலத்​தில் நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களுக்கு முன்​னுரிமை கொடுப்​பேன்.

நாடு முழு​வதும் பல்​வேறு நீதி​மன்​றங்​களில் ஏராள​மான வழக்​கு​கள் தேங்கி உள்​ளன. இந்த எண்​ணிக்​கையை குறைக்க நடவடிக்கை எடுப்​பேன்” என்று தெரி​வித்​தார். புதிய தலைமை நீதிப​தி​ சூர்ய காந்​துக்கு சவிதா என்​ற மனை​வி​யும்​ முக்​தா, கனுபிரி​யா என்​ற இரு மகள்​களும்​ உள்​ளனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *