பீகார் ;
ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜ் பிரதாப் யாதவின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது.
பீகாரில் ‘மகாபந்தன்’ ஆட்சியில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தவர் தேஜ் பிரதாப் யாதவ்(36). லாலுவின் மூத்த மகனான இவர் பக்சர் பகுதியில் பொது நூலகம் ஒன்றை திறந்து வைத்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தேஜ் பிரதாப் யாதவ் பாட்னாவின் ராஜேந்திர நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குறைந்த ரத்த அழுத்தத்தாலும் நெஞ்சுவலியாலும் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, தேஜ் பிரதாப் யாதவின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது என்ற செய்தியை அடுத்து, ஏராளமான ஆதரவாளர்கள் மருத்துவமனைக்கு வெளியே குவியத் தொடங்கியுள்ளனர்.