காஷ்மீர் ;
ஜம்மு-காஷ்மீரில் தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் தம்ஹால் ஹஞ்சிபோரா பகுதியில் உள்ள மஞ்ச்காமில் வசிப்பவர் மன்சூர் அகமது லாவே. அவர் குல்காம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் தம்ஹால் ஹஞ்சிபோரா பகுதியில் உள்ள மஞ்ச்காமில் வசிக்கும் மன்சூர் அகமது லாவே, அரசியலமைப்பின் 311வது பிரிவின் கீழ் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்ஹால் ஹஞ்சிபோரா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் லாவேயின் பெயர் உள்ளது. ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி என்கவுன்டரில் கொல்லப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, ஜூலை 9, 2016 அன்று ஒரு கும்பலைத் தூண்டியதாக மன்சூர் அகமது லாவே மீது குற்றம் சாட்டப்படுள்ளது.
இதன்படி தம்ஹால் ஹன்ஜிபோரா காவல் நிலையத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்ற கும்பல் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற அரசுச் சொத்துகளை சூறையாடியுள்ளது. அத்துடன் காவல் நிலையத்துக்கும் தீ வைத்துள்ளது.

இதே போல செப்டம்பர் 10, 2016 அன்று நடந்த மற்றொரு சம்பவத்தில், லாவே தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வழி நடத்திய கும்பல், பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு நடத்தியுள்ளது. அத்துடன் இந்த கும்பலில் இருந்த ஆயுதம் ஏந்தியவர்கள், போஸ் மீது கண்மூடித்தனமாக சுட்டனர் என்று கூறப்படுகிறது.
எனவே, மன்சூர் அகமது லாவே மாணவர்களிடையே பிரிவினைவாதத்தைத் தூண்டிகொண்டே , ஆசிரியராக பணிபுரிவது என்பது கூடாது என்று பணிநீக்க உத்தரவில் கூறப்பட்டுள்ளது.