பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதற்கு முன்னதாக பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
- இந்தியா எப்போதும் ஜனநாயகத்தை போற்றும் நாடு.
- பீகாரில் நடந்து முடிந்து தேர்தல் நாட்டின் ஜனநாயகத்தின் வலிமையை உலகுக்கு கூறியுள்ளது.
- நமது அனைவரது நோக்கமும் இந்திய தேசத்தின் வளர்ச்சியை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும்.
- குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும்.
- இந்த கூட்டத்தொடர், இந்த நாடாளுமன்றம் நாட்டைப் பற்றி என்ன நினைக்கிறது, நாட்டிற்கு என்ன செய்ய விரும்புகிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்க்கட்சிகளும் அதன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அவர்கள் இதுபோன்ற பிரச்சினைகளை, வலுவான பிரச்சினைகளை எழுப்ப வேண்டும்.
- தோல்வியின் ஏமாற்றத்தை அவர்கள் கடக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, தோல்வியை ஜீரணிக்க முடியாத சில கட்சிகள் உள்ளன. பீகார் முடிவுகள் வந்து இவ்வளவு நாள் கடந்துவிட்டதால், அவர்கள் கொஞ்சம் அமைதியடைந்திருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் நேற்று நான் கேள்விப்பட்டதிலிருந்து, தோல்வி அவர்களை தொந்தரவு செய்ததாகத் தெரிகிறது.
- விரக்தி மன நிலையில் இருந்து வெளியே வந்து பணியாற்றுமாறு எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.