‘தி கோட் லைப்’ படத்திற்காக 31 கிலோ எடை குறைத்த மலையாள பட உலகின் முன்னனி நடிகர் பிருத்விராஜ்!!

மலையாள பட உலகின் முன்னனி நடிகர் பிருத்வி ராஜ். இவர் ‘தி கோட் லைப்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் அமலாபால் , வினீத் ஸ்ரீவின்வாசன் மற்றும் ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 வருடமாக நடந்து வந்தது.


இந்த படத்திற்காக பிருத்விராஜ்31 கிலோ எடை குறைத்து இருந்தார். துரதிருஷ்டவசமாக 1.5 வருடங்களாக கோவிட் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவரது உடல் எடையும் அதிகரித்து.


அதன் பின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டதும் உடல் எடையை குறைக்க மீண்டும் அதே செயல்முறையை மேற்கொண்டார்.படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன.


இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார்.அவரது இசை படத்துக்கு கூடுதல் பலம் அளிப்பதாக அமைந்து உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளன. வருகிற 28- ந் தேதி (மார்ச்) படம் தியேட்டர்களில் வெளியாகுகிறது.

தமிழ், இந்தி, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியிடப்படுகிறது.


சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்தது.பிருத்விராஜ்க்கு இந்த படம் வெற்றிப்படமாக அமையுமா என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகின்றனர்.


பிருத்வி சிறந்த நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் பயணித்து வருகிறார் இவர் ‘ஆகஸ்ட் சினிமா’ என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.


இந்நிலையில் அண்மையில் வெளியான மலையாளப் படங்கள் தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து உள்ளது. மேலும் நடிகர் பிருத்விராஜின் ‘தி கோட் லைப்’ படத்தின் மீது ரசிகர்கள் பார்வை குவிந்து உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *