சென்னை;
முக்கிய பிரமுகர்களை தங்கள் கட்சிக்கு இழுக்கும் வேலைகளை பாஜகவும் அதிமுகவும் செய்து வருகிறது. அந்த வகையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 15 பேர் பாஜகவில் இணைந்தனர்.
இதனையடுத்து அதற்கு பதிலடி தரும் வகையில் பாஜகவின் மூத்த நிர்வாகியான நடிகை கவுதமியை அதிமுகக்கு கொண்டுவந்தனர். இப்படி இரு தரப்பிலிருந்தும் ஏராளமான நிர்வாகிகள் இடம் மாறியுள்ளனர்.
இந்நிலையில் பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில செயலாளரும், கோவை பெருங்கோட்ட பொறுப்பாளருமான செல்வபிரபுவை அமைச்சர் வேலுமணி அதிமுகவுக்கு கொண்டு வந்துள்ளார்.
இவர் பாஜகவில் கோவை மண்டலத்தில் மிக முக்கிய பொறுப்புகளை கவனித்து வந்தார். அண்ணாமலையின் மிக நெருக்கமான நண்பராகவும் இருந்து வந்தார். இவர் அதிமுகவுக்கு சென்றுள்ளது அங்குள்ள பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
