ஏப்.12 வரை இந்த வகுப்புகளுக்கு சிறப்பு !!

பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பில், ‘ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேற்றுடன் (ஏப். 5) முழு ஆண்டுத் தேர்வு முடிவடைந்தது . ஆதலால் அவ்வகுப்பு மாணவர்களுக்கு இன்று (ஏப். 6) முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.

நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் ஏப். 10 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஏப். 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை தேர்விற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக வரும் ஏப். 12ஆம் தேதிவரை சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வரவழைத்து, அவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் பணியினை ஆசியர்கள் மேற்கொள்ளலாம்.

அதன் பிறகு தேர்தல் பணிகள் ஆசிரியர்களுக்கு ஏப். 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதிவரை உள்ள காரணத்தினால் 4 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை. மீண்டும் ஏப். 22 மற்றும் ஏப். 23 ஆகிய தேதிகளில் மாணவர்கள் தேர்வுகள் எழுதுவார்கள்.

ஆசிரியர்களை பொருத்தவரை வரும் ஏப். 25ஆம் தேதிவரை அவர்களுக்கு வேலை நாட்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இடையில் தேர்தல் பணிக்காக செல்கின்றபோது அது On Duty ஆக கருதப்படும். தேர்தல் பணி இல்லாத நேரங்களில் பள்ளிக்கு வருகைபுரிந்து ஏற்கனவே நடைபெற்ற தேர்வு விடைத்தாள்களை திருத்துகின்ற பணி, மாணவர்களுக்கான promotion கொடுக்கின்ற பணி, promotion பதிவேட்டில் பதிவு கல்வி அலுவலருக்கு அனுப்புகின்ற மேற்கொள்ளலாம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *