முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆர்பிஐ. இனி வாடிக்கையாளர்கள் UPI-ஐ பயன்படுத்தி தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணத்தை டெபாசிட் செய்ய வாடிக்கையாளர்கள் இனி வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. .
மிக விரைவில் UPI வசதியை ATM இயந்திரங்களில் சேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி வந்த பிறகு, பணத்தை டெபாசிட் செய்ய வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், மிக விரைவில் ஏடிஎம் இயந்திரத்தை (ATM Machine) பயன்படுத்தி யுபிஐ மூலம் டெபாசிட் செய்யலாம் என கூறினார். பணத்தை டெபாசிட் செய்வது மட்டுமல்லாமல், பிபிஐ கார்டு வைத்திருப்பவர்களுக்கு பணம் செலுத்தும் வசதியும் அளிக்கப்படும்.
நன்மைகள்
- UPI மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி தொடங்கப்பட்டால், பணம் மற்றும் கார்ட் எடுத்துச்செல்லும் தேவை இருக்காது.
- ஏடிஎம் கார்டை நம்முடன் வைத்திருப்பதால் சில சமயங்களில் அது தொலையவும், திருடப்படவும் வாய்ப்புள்ளது.
- சில நேரங்களில் ஏடிஎம் கார்ட் திருடப்பட்டால், அது பிளாக் செய்யப்பட்ட பிறகும் பணத்தை டெபாசிட் செய்வதில் சிக்கல் ஏற்படாது.
- இந்த வசதி வந்த பிறகு, பணத்தை டெபாசிட் செய்ய வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.