சென்னை:
தெலுங்கு நடிகர் நானி நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘தி பாரடைஸ்’. காந்த் ஒடேலா இயக்கும் இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இதில் மோகன் பாபு, ராகவ் ஜூயல், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சி.சாய் ஒளிப்பதிவு செய்யும் இப்படம் தெலுங்கு, தமிழ் உள்பட 8 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இப்படத்துக்காக நானியின் அறிமுக பாடல், ஹைதராபாத் அருகே தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களின் பங்களிப்புடன் பிரம்மாண்டமான அரங்கில் இப்பாடல் உருவாக்கப்பட்டு உள்ளது. இப்பாடலுக்கு சுதன் நடனங்களை வடிவமைத்துள்ளார்.
எஸ்எல்வி சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகுரி தயாரிக்கும் இப்படம், மார்ச் 26-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆக. 21 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படமும் அதே தேதியில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.