தென் ஆப்பிரிக்கா அரை இறுதிக்கு முன்னேற்றம்!

அகமதாபாத்:
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் குரூப் 1-ல் இடம் பெற்​றுள்ள தென் ஆப்​பிரிக்கா – மேற்கு இந்​தி​யத் தீவு​கள் நேற்று அகமதா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் மோதின. இரு அணி​களுக்கும் இது 2-வது ஆட்​ட​மாக அமைந்​திருந்​தது.

முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி அதிரடி​யாக விளை​யாடியது. கேசவ் மகா​ராஜ் வீசிய முதல் ஓவரில் கேப்​டன் ஷாய் ஹோப் 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்டரியை விளாசி​னார்.

இந்த ஓவரில் மட்​டும் 17 ரன்கள் குவிக்​கப்​பட்​டன. மார்கோ யான்​சன் வீசிய அடுத்த ஓவரில் பிரண்​டன் கிங் 3 பவுண்​டரி​களை அடித்​தார். இதனால் 2 ஓவர்​களில் 29 ரன்​களை குவித்து மேற்கு இந்தியத் தீவு​கள் அணி மிரளச் செய்​தது.

ஆனால் இதன் பின்​னர் காகிசோ ரபா​டா, லுங்கி நிகிடி, கார்​பின் போஷ் ஆகியோர் தங்​கள் சீர​ரான வேகத்​தால் மேற்கு இந்​தி​யத் தீவு​களை அணியை கட்​டுப்​படுத்​தினர்.

ஷாய் ஹோப் 16 ரன்​களில் ரபாடா பந்​தில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்​கிய ஷிம்​ரன் ஹெட்​மயர் 2 ரன்​களில் ரபாடா பந்​தில் நடையை கட்​டி​னார். பிரண்​டன் கிங் 11 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 21 ரன்​களில் லுங்கி நிகிடி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

ராஸ்​டன் சேஸ் 2, ஷெர்​பேன் ரூதர்​போர்டு 12, ரோவ்​மன் பவல் 9, மேத்யூ போர்டு 11 ரன்​களில் நடையை கட்​டினர். 10.2 ஓவர்​களில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 83 ரன்களுக்கு 7 விக்​கெட்​களை இழந்து தவித்​தது. ஆனால் அதன் பின்​னர் ஜேசன் ஹோல்​டர், ரோமாரியோ ஷெப்பர்டு ஜோடி தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்டு தென் ஆப்​பிரிக்க பந்​து​வீச்​சாளர்​களுக்கு நெருக்​கடி கொடுத்​தது.

ரோமாரியோ ஷெப்​பர்டு 37 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 52 ரன்​களும் ஜேசன் ஹோல்​டர் 31 பந்துகளில், 3 சிகஸ்ர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 49 ரன்​களும் விளாச மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 20 ஓவர்​களில் 8 விக்கெட்​கள் இழப்​புக்கு 176 ரன்​கள் குவித்​தது. 8-வது விக்​கெட்​டுக்கு ஜேசன் ஹோல்​டர், ரோமாரியோ ஷெப்​பர்டு ஜோடி 57 பந்​துகளில், 89 ரன்​கள் விளாசி​யது.

தென் ஆப்​பிரிக்க அணி தரப்​பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்களை வீழ்த்​தி​னார். காகிசோ ரபா​டா, கார்​பின் போஷ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர்.

இதையடுத்து 177 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி எய்​டன் மார்க்​ரம், குயிண்​டன் டி காக் ஆகியோரது அதிரடி​யால் 16.1 ஓவர்​களில், ஒரு விக்​கெட்டை மட்​டும் இழந்து 177 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்றது.

தனது 14-வது அரை சதத்தை கடந்த கேப்​டன் எய்​டன் மார்க்​ரம் 46 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 82 ரன்​களும் ரியான் ரிக்​கெல்​டன் 28 பந்​துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​களும் விளாசினர். இந்த ஜோடி 2-வது விக்​கெட்​டுக்கு 50 பந்​துகளில் 82 ரன்களை குவித்​தது.

முன்​ன​தாக குயிண்​டன் டி காக் 24 பந்​துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்​டரி​களு​டன் 47 ரன்​கள் விளாசிய நிலை​யில் ராஸ்​டன் சேஸ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். முதல் விக்​கெட்​டுக்கு எய்​டன் மார்க்​ரம், குயிண்​டன் டி காக் ஜோடி 48 பந்​துகளில் 95 ரன்​களை வேட்​டை​யாடியது.

9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு சூப்​பர் 8 சுற்​றில் இது 2-வது வெற்றியாக அமைந்​தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்​பிய​னான இந்​தி​யாவை வீழ்த்தியிருந்​தது. மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு இது முதல் தோல்​வி​யாக அமைந்தது.

அந்த அணி தனது முதல் ஆட்​டத்​தில் ஜிம்​பாப்​வேவை வீழ்த்​தி​யிருந்​தது. 2 புள்​ளி​களு​டன் உள்ள மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தனது கடைசி ஆட்​டத்​தில் வரும் 1-ம் தேதி நடப்பு சாம்​பிய​னான இந்​தி​யா​வுடன் மோதுகிறது. இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெறும் அணி அரை இறுதி வாய்ப்பை பெறும்​.

இந்நிலையில் நேற்று குரூப் 1-ல் 2-வது நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி, ஜிம்பாப்வேவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் முடிவால் தென் ஆப்பிரிக்க அணி குரூப் 1-ல் 4 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறியது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *