நாமக்கல் கவிஞரின் மூத்த மகள் திருமதி இராஜலட்சுமி அனுமந்தன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !!

நாமக்கல் கவிஞரின் மூத்த மகள் திருமதி இராஜலட்சுமி அனுமந்தன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்னும் அருமையான கவிதை வரிகளைப் படைத்து தமிழர்களின் நெஞ்சங்களில் எல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பவர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தின் 10 மாடிக் கட்டடம் நாமக்கல் கவிஞரின் உயிர்த் துடிப்பான இந்தக் கவிதை வரிகளைத் தாங்கி நிற்கிறது; இரவிலும் ஒளிர்கிறது.அந்த மகத்தான கவிஞரின் மூத்த மகள் இராஜலட்சுமி அனுமந்தன் (வயது 92) அவர்கள் வயது முதிர்வு காரணமாக இன்று (8.4.2024) மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருந்தினேன்.

திருமதி இராஜலட்சுமி அனுமந்தன் அவர்களது மறைவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரை இழந்து வருந்தும் அவருடைய குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், தமிழ் நெஞ்சங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *