பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில நகைச்சுவை பெண் நடிகர்களே உள்ளனர். அந்த வரிசையில் ஒருவர் நடிகை ஆர்த்தி கணேஷ். இவர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்று மக்கள் மத்தியில் கூடுதல் பிரபலமானார். இவரது கணவர் நடிகர் கணேஷ்.
நடிகை ஆர்த்தி கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்பு அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகிய அவர் அரசியல் பக்கமே தலைகாட்டவில்லை.
இந்நிலையில் நடிகை ஆர்த்தி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று பாஜகவில் தன்னை இணைத்து கொண்டுள்ளார். ஏற்கனவே ஆர்த்தியின் கணவர் கணேஷ் பாஜகவில் உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.