தேர்​தல் பறக்​கும் படை அதி​காரி​கள் சோதனை​யில், படப்​பிடிப்​புக்​காக வேனில் கொண்டு செல்​லப்​பட்ட டம்மி ‘ஏ.கே 47’ துப்​பாக்​கி​கள் பறி​முதல்!!

சென்னை:
தேர்​தல் பறக்​கும் படை அதி​காரி​கள் சோதனை​யில், படப்​பிடிப்​புக்​காக வேனில் கொண்டு செல்​லப்​பட்ட டம்மி ‘ஏ.கே 47’ துப்​பாக்​கி​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

அரசி​யல் கட்​சிகள் பணம், பரிசு பொருட்​களை கொடுத்து வாக்​காளர்​களை கவர்ந்து விடக்​கூ​டாது என்​ப​தற்​காக, தேர்​தல் பறக்​கும் படை அதி​காரி​கள் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டுள்​ளனர்.

அந்த வகை​யில், சென்​னை, தி.நகர் சட்​டப்​பேரவை தொகு​திக்​குட்​பட்ட அசோக்​நகர் 2-வது அவென்​யூ​வில் நேற்று முன்​தினம் இரவு தேர்​தல் பறக்​கும் படை​யினர் வாகன தணிக்​கை​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது, அவ்​வழி​யாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி சோதனை​யிட்​ட​தில், ஏ.கே. 47 ரக துப்​பாக்​கி​கள் 10 இருந்​தன.

இதைக் கண்டு அதிர்ந்த பறக்​கும்​படை அதி​காரி​கள், துப்​பாக்​கி​களை ஆய்வு செய்​த​போது அவை அனைத்​தும் டம்மி துப்​பாக்​கி​கள் என்​பது தெரிய​வந்​தது. அதன் பிறகே அதி​காரி​கள் நிம்​ம​தி​யடைந்​தனர்.

இதையடுத்​து, அனைத்து துப்​பாக்​கி​களை​யும் பறி​முதல் செய்து வேன் ஓட்​டுநர் மகேந்​திரனை அசோக்​நகர் காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர்.

இதில், அவை பிரபல இயக்​குநர் லோகேஷ் கனக​ராஜ் நாயக​னாக நடித்து வரும் புதிய படத்​தில் பயன்​படுத்​தி​யதும், படப்​பிடிப்பு முடிந்​த​தால், வடபழனி​யில் உள்ள கடை​யில் ஒப்​படைக்க கொண்டு சென்​றதும் தெரிந்​தது.

மேலும், துப்​பாக்​கி​களுக்கு உரிய ஆவணங்​கள் இருந்​த​தால் அதனை ஆய்வு செய்து மீண்​டும் வேன் ஓட்​டுநர் மகேந்​திரனிடம் பறக்​கும் படை அதி​காரி​கள்​ ஒப்​படைத்​தனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *