சித்திரை மாத பூஜை, விஷூ பண்டிகை: சபரிமலையில் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது!!

மாத பூஜை மற்றும் விஷு பண்டிகை சிறப்பு பூஜை, வழிபாடுகளுக்கு பிறகு 18-ந்தேதி இரவு நடை அடைக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நடந்து வருகிறது. வருகிற ஏப்ரல் 1-ந்தேதி, பம்பையில் நடைபெறும் ஆராட்டு சடங்குகளுக்கு பின் அன்றைய தினம் மாலையில் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.

அதை தொடர்ந்து சித்திரை மாத பூஜைக்காக கோவில் நடை ஏப்ரல் 10-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

மறுநாள் 11-ந் தேதி முதல் வழக்கமான பூஜை, வழிபாடு தொடர்ந்து நடைபெறும். மாத பூஜை மற்றும் விஷு பண்டிகை சிறப்பு பூஜை, வழிபாடுகளுக்கு பிறகு 18-ந்தேதி இரவு நடை அடைக்கப்படும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *