கோவையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் திறக்கப்படும் என அண்ணாமலை வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. எனவே அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கோவை மக்களவை தொகுதியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள அண்ணாமலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கோவை விளாங்குறிச்சி பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது பேசிய அண்ணாமலை, சமூகவிரோதிகள் இல்லாத கட்சி என்றால் அது பாஜக தான். கோவையில் மத்திய அரசின் போதை தடுப்பு பிரிவு அலுவலகம் அமைக்கப்படும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
வாக்கு எண்ணிக்கை முடிந்து 100 நாளில் கோவையில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.