மாநில உரிமைகளை பறிக்கும் பாசிச கூட்டத்தையும் உரிமைகளை தாரைவார்த்த அடிமைகளையும் விரட்டியடிப்போம் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஒரு பொதுத்துறை நிறுவனமாவது தொடங்கப்பட்டுள்ளதா? அனைத்து பொதுத்துறைகளையும் தனது நெருங்கிய நண்பர் அதானிக்கு தாரை வார்த்தவர்தான் மோடி.மாநில உரிமைகளை பறிக்கும் பாசிச கூட்டத்தையும் உரிமைகளை தாரைவார்த்த அடிமைகளையும் விரட்டியடிப்போம். ஜூன் 4 ஆம் தேதி இந்தியாவில் ஜனநாயகம் மலரட்டும்.
பிரதமர் தமிழ்நாட்டில் வீடு எடுத்து தங்கினாலும் பாஜக வெல்லாது.தமிழ்நாடு மீது பிரதமருக்கு எந்த அக்கறையும் இல்லை. தேர்தலுக்கு தேர்தல் பேன்ஷி டிரஸ் ஷோ போல வந்து செல்கிறார். பாஜக கொண்டு வரும் சட்டத்தை எதிர்த்தால் விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டல் பாஜகவின் உருட்டல், மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம் என்றார்.