ராம​நாத​புரம் மாவட்​டம் முதுகுளத்​தூர் தொகு​தி​யில் உரிய ஆவணமின்றி எடுத்​துச் சென்ற ரூ.9.47 கோடி மதிப்​பிலான தங்​க வைர, வெள்ளி நகைகள் பறி​முதல்!!

ராம​நாத​புரம்:
ராம​நாத​புரம் மாவட்​டம் முதுகுளத்​தூர் தொகு​தி​யில் உரிய ஆவணமின்றி எடுத்​துச் சென்ற ரூ.9.47 கோடி மதிப்​பிலான தங்​க வைர, வெள்ளி நகைகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

முதுகுளத்​தூர் தொகுதி தேர்​தல் நிலை​யான கண்​காணிப்​புக் குழு அலு​வலர் ராஜேஸ்​வரன் தலைமையி​லான பறக்​கும் படை​யினர் சாயல்​குடி அருகே கிழக்​குக் கடற்​கரைச் சாலை​யில் உள்ள கன்​னி​ராஜபுரம் சோதனைச் சாவடி​யில் சனிக்​கிழமை இரவு வாக​னத் தணிக்​கை​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது தூத்​துக்​குடி சாலை வழி​யாக திருப்​பரங்​குன்​றம் ஹார்​விபட்​டியைச் சேர்ந்த செல்​வகு​மார் மகன் ராஜா (36) என்​பவர் காரில் வந்​தார்.

காரை தேர்​தல் பறக்​கும் படை​யினர் சோதனை​யிட்​ட​தில் 18 பெட்​டிகளில் தங்​கம், வைரம், வெள்ளி நகைகள் இருந்​தன.

விசா​ரணை​யில் மதுரை​யில் உள்ள ஒரு தனி​யார் நிறு​வனத்​தைச் சேர்ந்த நகைகள் என்றும், ஆர்டரின் பேரில் எடுத்துச் செல்​வதாக​வும் கூறி​னார்.

ஆனால், உரிய ஆவணங்​கள் இல்லாததால் ரூ.9.47 கோடி நகைகள் பறி​முதல் செய்யப்பட்டு முதுகுளத்தூர் துணை வட்டாட்​சி​யர் ராஜ்கு​மாரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *