கோவையிலிருந்து ஆன்மீக தலங்களுக்கு 10 ரயில்கள் இயக்கப்படும் – பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அண்ணாமலை!!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளையும் அள்ளி வீசி வருகின்றன. அந்த வகையில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பாஜக மாநில தலைவரும், அத்தொகுதியின் வேட்பாளருமான அண்ணாமலை. 100 வாக்குறுதிகளும் 500 நாட்களில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவை பின்வருமாறு:-

கோவை எப்போதும் பசுமையாக இருக்க மரங்கள் நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை
பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
சரவணம்பட்டியில், மக்களின் பொழுதுபோக்குக்காக பொதுப்பூங்கா அமைக்க நடவடிக்கை
கோவையில் ஐஐஎம் கொண்டுவர வலியுறுத்துவோம்
கோவையில் இருந்து ஆன்மிக தளங்களுக்கு 10 புதிய ரயில்கள் இயக்கம்
250 மக்கள் மருந்தகம் ஒன்றரை ஆண்டுகளில் கொண்டு வரப்படும்

கோவையில் சர்வதேச விமான முனையும் அமைக்கப்படும்
காமராஜர் பெயரில் மூன்று உணவு வங்கி அமைக்கப்படும்
கோவை தொகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் அமைக்கப்படும்
கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை
கோவை தொகுதியில் நான்கு நவோதயா பள்ளிகள் அமைக்கப்படும்
கோவையிலிருந்து ஆன்மீக தலங்களுக்கு 10 ரயில்கள் இயக்கப்படும்
கோவை தொகுதியில் 250 மக்கள் மருந்தகங்கள்
6 சட்டமன்ற தொகுதிகளில் தனித்தனி அலுவலகங்கள் திறக்கப்படும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *