மகளிருக்கான சானிட்டரி நாப்கின் ரூ. 1-க்கு வழங்கப்படும் – வெளியானது பாஜக தேர்தல் அறிக்கை!!

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக குழு அமைத்தது. வாக்குறுதிகளுக்கு மக்களிடமிருந்து 15 லட்சம் பரிந்துரைகளை பாஜக பெற்றுள்ளது.

ராஜ்நாத் சிங் தலைமையிலான தேர்தல் அறிக்கைக் குழு இருமுறை கூடி விவாதித்தது.

இந்த நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியிடப்பட்டது.

தேர்தல் அறிக்கை முக்கிய அம்சம்:

ஒரே நாடு ஒரே தேர்தல், பொது வாக்காளர் முறை பட்டியல் முறை அறிமுகப்படுத்தப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் திட்டம் நடைமுறையில் இருக்கும்.

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.

ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் படிப்படியாக தளர்த்தப்படும்.

ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்.

மகளிருக்கான சானிட்டரி நாப்கின் ரூ. 1-க்கு வழங்கப்படும்.

முத்ரா திட்டத்தில் வழங்கப்படும் கடன் உச்ச வரம்பு ரூ. 20 லட்சமாக உயர்த்தப்படும்.

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் விரிவுப்படுத்துதல், மேலும், 70 வயதைக் கடந்தவர்களுக்கு சிறப்பு கவனம்,

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஏழை மக்களுக்கு மூன்று கோடி வீடுகள் கட்டித்தருதல்,

சூரிய வீடுகள் திட்டத்தின்கீழ் இலவச மின்சார திட்டம்,

கிராமப்புரத்தில் இருக்கும் மூன்று கோடி ஏழைப்பெண்களை தொழில்முனைவோராக ஊக்குவித்து லட்சாதிபதி ஆக்குதல்,

தமிழ்மொழியை பாதுகாத்து உலகம் முழுதும் கொண்டு செல்லுதல்,

திருவள்ளுவர் பெயரில் கலாச்சார மையம் அமைத்தல்,

முத்ரா திட்டத்தின்கீழ் கடன் தொகை ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக அதிகரித்தல்,

மக்கள் மருந்தகங்களில் 80 சதவிகித தள்ளுபடியில் மருந்துகள் கிடைத்தல்,

2025 பழங்குடியினர் கவுரவ ஆண்டாக அங்கீகரித்தல்,

மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் திருநங்கைகள் இணைக்கப்படுவர்,

வடகிழக்கு மாநிலங்களில் புல்லட் ரயில் திட்டம் கொண்டுவருதல்,

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உயர்த்தப்படுதல்,

2036 ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை,

மானிய விலையில் கேஸ் சிலிண்டர்,

அடுத்தகட்டமாக, அனைத்து கிராமங்களுக்கு பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *