வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி நிறுத்தம் – பயணிகள் அதிர்ச்சி..!

சென்னையில் இயக்கப்படும் மெட்ரோவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். பயணிகள் வசதிகள், தேவைகள், கவுண்ட்டரில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பதால் நேர விரயம் இவைகளை தவிர்க்கும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகள் டிக்கெட்டுகள் பெறலாம் எனத் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள் , வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட் டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் மூலம் மற்றும் Paytm App மூலம் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க வாட்ஸ் அப் மூலம் தற்காலிகமாக டிக்கெட் பெற இயலாது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், “தொழில்நுட்ப கோளாறு காரணமாக WhatsApp Chatbot மூலம் டிக்கெட்டுகள் பெறும் சேவை தற்காலிகமாக இயங்கவில்லை.CMRL பயண அட்டை, மொபைல் செயலி, Paytm, Phonepe, சிங்கார சென்னை கார்டு என மற்ற பிற சேவைகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

தகவல் கிடைக்கும் வரை பயணிகள் கவுண்ட்டரிலும் டிக்கெட்டுகளை பெறலாம். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்,” என தெரிவித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *