நாடாளுமன்ற தேர்தலையொட்டி பொதுமக்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தீவிரமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
அனைத்துக் கட்சி வேட்பாளர்கள், சினிமா பிரபலங்களும் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் விக்ரம் சென்னை பெசண்ட் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
முன்னதாக தமிழ் சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் தங்களது வாக்கினை செலுத்தினர்.