தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .
21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்களும் , அரசியல் கட்சி பிரமுகர்களும் மிகுந்த ஆர்வமுடன் வரிசை நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை SIET கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவியுடன் வருகை புரிந்தார். பின்னர் வரிசையில் காத்திருந்த அவர் தனது வாக்கினை செலுத்தினார்.
இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் , நான் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளேன். அதேபோல் வாக்குரிமை பெற்றுள்ள அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். இந்தியாவுக்கு வெற்றிதான் என்றார்.