திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வருகை தந்து வாக்களித்தார் – நடிகர் அஜித்குமார்!!

நடிகர் அஜித்குமார் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுவை உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

இந்நிலையில் வழக்கம் போல் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கிய 7 மணிக்கு முன்பாகவே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு நடிகர் அஜித்குமார் முதல் ஆளாக வருகை புரிந்தார்.

பின்னர் வாக்குசாவடி மையத்தில் காத்து கொண்டிருந்த அவர் தனது வாக்கினை செலுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *