சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்கு சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாக்கினை பதிவு செய்தார். தனது மனைவி ஆர்த்தியுடன் வாக்குச்சாவடிக்கு வருகை புரிந்த அவர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் , அனைவரும் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.
இதை நாம் ஒரு திருவிழாவாகவே கொண்டாடலாம். ஒரு அரை மணி நேரம் ஒதுக்கி வாக்களித்த பின்னர் நீங்கள் இன்றைய நாளை கொண்டாடலாம். இது எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒன்று. முதல் முறை வாக்காளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
நீங்கள் உங்கள் மனசாட்சி படி வாக்களியுங்கள். வீட்டில் சொல்வதைக் கூட கேட்காதீர்கள். உங்களுக்கு யாரை பிடிக்குமோ, நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள்.
ஆபிரகாம் லிங்கன் சொன்னது போல் ஒரு புல்லட்டை விட வலிமையானது வாக்கு . அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.
